வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 29 செப்டம்பர், 2010

இளம் இந்தியர்கள் அமைதியை நிலைநாட்டுவர்-ப.சிதம்பரம்

யோத்தி தீர்ப்பை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்று நம்புவதாகவும், அதே நேரத்தில் பிரச்சனை கிளப்புவோரை ஒடுக்க நாடு முழுவதும் அதி தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்
.டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடு முதிர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன்.
அதே நேரத்தில் அமைதியைக் கெடுக்க முனைவோரை ஒடுக்க முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை முழுமையாக பேணிக் காக்குமாறு அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தரப்பினரும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அமைதியை பேணுமாறு அனைத்து மத, அரசியல் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் மதத் துவேசம் இல்லாத இளம் இந்தியர்கள் அமைதியை நிலைநாட்ட உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
இந்தியா நெடுந்தூரம் பயணித்துவிட்டது. 1992ம் ஆண்டுக்குப் பின் பிறந்த இந்தியர்களிடம், உலகம் குறித்த வேறு பார்வை உள்ளது. அயோத்தி பிரச்சனைக்கு அப்பாலும் இந்தியாவும் இந்தியர்களும் பயணிக்க வேண்டிய வெற்றிப் பாதையை அவர்கள் சிறப்பாகவே உணர்ந்துள்ளனர்.
அயோத்தி விஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்போம் என்றே பெரும்பாலான இந்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 1990களில் இருந்த நிலைமையோடு ஒப்பிடுகையில் இது மாபெரும் மாற்றம். இதனால் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது.
சட்டச்சை மதிப்போம், நீதிமன்ற உத்தரவை ஏற்போம் என்று பாஜக அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் இதே நிலையை எடு்தது, சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும்.
பல்க் எஸ்எம்எஸ், எம்எம்எஸ் மீதான தடை அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும் என்றார் சிதம்பரம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’