வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 செப்டம்பர், 2010

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுகொடுக்க நடவடிக்கை

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுகொடுக்க விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்;த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்
.இன்று கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினருடனான சந்திப்பிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்;த்தி முரளிதரனை மட்டக்களப்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போத கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,
நீண்டகாலமாக தொடர்ந்துவரும் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
இது தொடர்பில் ஏற்கனவே கல்வி அமைச்சர் பந்துல குணர்வத்தனவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளேன்.
மிக விரைவில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய பிரதிநிதிகளை கல்வி அமைச்சரை சந்திக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளேன்.
இவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி சந்தித்து தமது கோரிக்கையினை முன்வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’