வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 செப்டம்பர், 2010

வட மாகாணசபை தேர்தல் நடத்துவதான ஏற்பாடுகளில் அரசாங்கம் துரிதம்

ட மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் பின்னர் வட மாகாணசபையை நிறுவுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிடுவார் என்று அரசாங்கத்தின் அமைச்சரொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பினை அடுத்து தேர்தல் ஆணையாளரினால் வட மாகாண தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் கோரப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களுக்கு அமைவாகவே வட மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’