வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 செப்டம்பர், 2010

கட்சி பிரச்சினையைத் தீர்க்க தேசிய மாநாட்டைக் கூட்ட வேண்டும் : சஜித்

க்கிய தேசியக் கட்சியின் தற்போதைய உட்பூசலைத் தீர்ப்பதற்கு கட்சியின் தேசிய மாநாட்டைக் கூட்ட வேண்டுமென ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்
.ஐக்கியத் தேசியக் கட்சியில் இன்று ஏற்பட்டுள்ள தலைமை தொடர்பான பதட்ட நிலையைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான இடம் குளிரூட்டப்பட்ட அறையன்றி கட்சி மாநாடாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று மாலை மாத்தளை கலேவல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,
"ஐக்கிய தேசிய கட்சிக்குள் பல பிரச்சினைகள் இருப்பதாக சிலர் வதந்திகளைப் பரப்பி வந்த போதும் கட்சிக்குள் தற்போது அவ்வாறான எந்தப் பிரச்சினையும் இல்லை.
எமது கட்சியைப் பலவீனப்படுத்துவதற்காகவே சிலர் இவ்வாறு செய்கின்றனர். இது ராஜாக்களுக்கு வெற்றியளிக்காது. தற்போது எமக்குள் பிரதி தலைவருக்கான போட்டி மட்டுமே உள்ளது. அப்போட்டியும் சுமூகமானத் தீர்க்கப்படும்"என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’