அண்மையில் (15.09.2010) இரவு கல்லடி மட்டக்ளப்பில் வைத்து வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்ட முனுசாமி நரேஸ்நாகேந்திரன்(30) என்ற இளைஞன் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தனது வீட்டிற்கு அருகாமையில் நல்லிரவு மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டது தொடர்பாக இவரது மனைவி காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். தனது கணவர் தன்னடன் வீட்டிலிருந்த வேளையிலே வெள்ளைவானில் வந்த இராணுவ வீரர்களைப் போல் காட்சியளித்த இனம்தெரியாதோர்களே கடத்திச் சென்றதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிபிட்டிருந்தார். அத்தோடு தனது கணவரைக் கடத்திச்சென்றவர்களைத் தான் அடையாளம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தனது கணவர் கடத்தப்பட்டமைக்கு எதிராக இன்று(17.09.2010) தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் கடத்ப்பட்டவரின் மனைவி தெரிவித்திருந்தார். கடத்தப்பட்டடவர் உடனடியாக விடுவிக்கப்பட்டமைக்கு இதுவும்அ ஓர் காரணமாகும்.
ஏலவே மட்டக்களப்பில் மட்டு மாநகரசபை உறுப்பினர் சகாயமணி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. மட்டக்களப்பில் மேற்படி நடக்கும் கடத்தல் சம்பவங்களுக்கு மழுப்பொறுப்பினையும் பாதுகாப்புத் தரப்பினரே பொறுப்பேற்க வேண்டும் என கடத்தப்பட்வரின் உறவினர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’