வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 2 செப்டம்பர், 2010

கிழக்கு மாகாண காணிகளை வெளிமாவட்டத்தில் உள்ளோருக்கு வழங்கமுடியாது: கிருஸ்ணானந்தராஜா

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிமாவட்டத்தில் உள்ளோருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா தெரிவித்துள்ளார்.
வந்தாறுமூலை மகா விஸ்ணு வித்தியாலயத்தில் நடைபெற்ற வந்தாறுமூலை பட்டதாரிகள் முன்பள்ளி வருடாந்த பரிசளிப்ப விழா வில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர், தற்போது கிழக்க மாகாணத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மாகாணத்தின் காணிகள் கிழக்கு மாகாணம் அல்லாத வெளிமாவட்டத்தாருக்கு குத்தகை அடிப்படையிலும் வேறு பல முறைகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது அதாவது 30வருட காலமாக யுத்தத்தில் சிக்கி கிடந்த கிழக்கு மாகாணம் தற்போது யுத்தநிலை நீங்கியபின்னர் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இவ் அபிவிருத்தியின் பங்காளிகளாகா கிழக்கு மாகாணத்தில் வசிக்கம் மூவின மக்களுமே இருக்க வேண்டும்
 இதற்குரிய நிதி வசதிகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள வணிக வங்கிகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு செய்து கொடுக்க முன்வர வேண்டும். நிதி நிறுவனங்களின் மந்தமான செயற்பாடும் கடன் வழங்குவதில் காணப்படும் கடுமையான நடைமுறைகளுமே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூதலீட்டாளர்கள் உருவாக தடையாக உள்ளது.
எனவே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு இலகு நிபந்தனை அடிப்படையில் மூதலீட்டு கடன்களை வழங்குவதற்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கும் வணிக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் முன்வர வேண்டும். கிழக்கைச் சேர்ந்தவர்கள் முதலீட்டாளர்களாக மாறும் பட்சத்திலையே அதன் பலாபலன்கள் கிழக்கு மாகாணத்திற்கு வளர்சியினை ஏற்படுத்தும்.
அத்தோடு மாகாண வருமான மட்டத்திலும் தலா வருமானத்தினையும் அதிகரிக்க முடியும் என்றார். இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் எ.சி.கைலேஸ்வர்ராஜா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரி இளையதம்பி சிறிநாத், கிராமசேவை கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர், பழையமாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’