கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
.4 நாட்களைக்கொண்ட இந்த ஆண்குழந்தை மட்டக்களப்பு இருதயபுரம் பஸ் தரிப்பு நிலையத்திற்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவக்கப்படுகின்றது.
நேற்று (15.09.2010) அதிகாலை 3.30 மணியளவில் இக்குழந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’