இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள போதிலும் 18 நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்
.தேவஹந்தியே தம்மாராம தேரரை வரவேற்பதற்காக பத்தரமுல்ல ஸ்ரீ சுதர்மாராம புராண விகாரையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும் 18 நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்கள் இலங்கையைப் பிரித்துத் தனியான ராஜ்யமொன்றை உருவாக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
18 பேராசிரியர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’