வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 செப்டம்பர், 2010

ஐக்கிய நாடுகள் உயர் பிரதிநிதிகள் மற்றும் உதவி வழங்குனர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருட்ன் சந்திப்பு.

ன்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் நீலவூனே தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதிகள் மற்றும் உதவி வழங்குனர்கள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து பேச்சு நடாத்தினார்கள்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ளது, தற்போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல வெளிநாட்டு உதவி வழங்குனர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்களை விரைவுபடுத்துவதோடு எதிர்காலத்தில் பல்வேறு புதிய அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலைமச்சர் சந்திரகாந்தன் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு தமது நன்றியினையும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற 5 ஆண்டுத் திட்டம் அடங்கிய விபரங்கள் காட்சியளிக்கப்பட்டன. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.பி பாலசிங்கம் அமைச்சின் செயலாளர்கள் அத்தோடு வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆகியார் கலந்து கொண்டனர்.

UN பிரதிநிதிகள்
01. Mr.நீல் வூனே - ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட
இணைப்பாளர்.
02. Mr.பெட்ரிக் எவன்ஸ் - உணவு விவசாய நிறுவனத்தின் பிரதிநிதி.
03. Mr.றேஷா கொசேனி - யுனிசெப் பிரதிநிதி.
04. ஆள.டைட்றோ கியர்மன் - யுனிசெப் கள நடவடிக்கைகளுக்கான
தலைவர்.
05. Mr.நாஓக்கி மாயேகாவா - உலக உணவு நிகழ்ச்சித் திட்ட
அலுவலர்.
06. Ms. ஷோ கீலர் - ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின்
விரைவு மீழ்ச்சி இணைப்பாளர்.
வழங்குனர்கள்.
01. Mr. ஹியன் லூகா ரூபா கொட்டி- இத்தாலிய தூதரகத்தின் பிரதித் தலைவர்.
02. Mr. விலி வண்டன் வேர்க் - ஐரோப்பிய ஒன்றியத்தின்
நடவடிக்கைத் தலைவர்.
03. ஆள. சலி லொஷ்டர் - அவுஸ்ரேலிய தூதரகத்தின்
அரசியல் விவகார உத்தியோகத்தர்.
04. Mr. ஸ்ரீபன் லொஷ்டர் - அவுஸ்ரேலிய தூதரகத்தின்
அரசியல் விவகார உத்தியோகத்தரும்,
05. Mr. நிஷால் அத்தபத்து - கனடா சர்வதேச அபிவிருத்தி
நிறுவனத்தின் (சீடா) சிரேஸ்ட்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தரும்.

06. Mr. டேவில் மேர்ட்டன் - பிரித்தானிய தூதரகத்தின் அரசியல்
மற்றும்
அபிவிருத்தி பிரிவின் தலைவர்.
07. Ms. சுவேதா வேல்பிள்ளை - பிரித்தானிய
உயர்ஸ்தானிகராலத்தின் பிரதி
நிகழ்ச்சி திட்ட முகாமையாளர்.
08. Ms.கொன்ரன்ஸ் விதசன் - பிரெஞ்சு தூதரகத்தின்
அபிவிருத்திக்கும் மனிதநேயத்துக்குமான
நிருவாக உத்தியோகத்தர்.
09. Mr. சுயோஷி ஹாரா - JICA பிரதிநிதி.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’