வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 செப்டம்பர், 2010

நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்

மிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான முரளி தனது 47ஆவது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக சென்னை, போரூர் ராமச்சந்திரா வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது.
பிரபல கன்னட தயாரிப்பாளர் சித்தளிங்கய்யாவின் மகனான முரளி, 1984ஆம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் நடித்தார்.
இதயம், புதுவசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு, கடல்பூக்கள், தேசிய கீதம், வாட்டாகுடி இரணியன், மம்முட்டியுடன் ஆனந்தம், சரத்குமாருடன் சமுத்திரம்,சிவாஜியுடன் என் ஆச ராசாவே, விஜயகாந்துடன் என் ஆசை மச்சான், அள்ளித்தந்த வானம், சுந்தரா டிராவல்ஸ், அதர்மம், கீதாஞ்சலி, உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்தார்.
இவரது மகன் அதர்வா, நாயகனாக நடித்த "பாணா" திரைப்படம் தற்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகனாகிவிட்ட மகன் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாடியிருந்த முரளி, "30 வருட திரையுலக வாழ்க்கையில் நான் ஆயிரம் தவறுகள் செய்திருக்கிறேன்.
அதையெல்லாம் மன்னித்து தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என் மகன் அதர்வாவிடம், தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் "பகல் நிலவு", "இதயம்" படங்களில் நடித்தேன். அதே நிறுவனம் என் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளமை சந்தோஷத்துக்குறியது. "பூவிலங்கு" படத்தில் நான் நடித்திருந்ததை விட அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறான். எனக்கு நடனமாடவே வராது. ஆனால், அதர்வா நன்றாக நடனமாடியிருக்கிறான். ஒரு நடிகன் மகன் ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம். இங்கு வந்திருந்தவர்கள், அதர்வாவை பாராட்டினார்கள். எனவே அவன் ஜெயித்து விடுவான் என நம்புகிறேன்" என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’