இவ்வெடிப்பு சம்பவத்தில் 60க்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார். இன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 60க்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 50க்கும் அதிகமானவர்கள் இதுவரையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்துள்ளவர்களில் பொது மக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கூடியுள்ள காயமடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவதாகவும் காயமடைந்தோரைப் பார்வையிட பெருந்திரளான மக்கள் வைத்தியாசாலையில் கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரொய்ட்டர் மற்றும் ஏ.எப்.பி செய்தி நிறுவனங்களின் செய்திகள்
சீனா நிறுவனமொன்றால் பெருந்தெருக்கள் மற்றும் கற்பாறையகழ்ந்து கல்லுடைத்தல் வேலைகளிற்காகக் கிழக்கு மாகாணத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட “டைனமற்” கொள்கலன்கள் இரண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்றும்
பாதுகாப்புக் காரணங்களிற்காக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவற்றில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக மேற்படி டைனமற் வெடித்துப் பாரிய சேதத்தை ஏற்படுத்தின என்றும் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 2 சீனர்கள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டதாகவும் கொல்லப்பட்டவர்களில் அநேகர் மேற்படி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸார் என்றும் ரொய்ட்டர் மற்றும் ஏ.எப்.பி செய்தி நிறுவனங்களின் செய்திகள் மூலம் தெரியவருகிறது.
விபத்து எவ்வாறு இடம்பெற்றது?
பெருந்தெருக்கள் வேலைக்கான கல்லுடைத்தல், பாறையகழ்தல் வேலைகளிற்கான மேற்படி டைனமற் நிரப்பப்பட்ட இரண்டு கொள்கலன்களும் பாதுகாப்புக் காரணங்களிற்காக பொலிஸ் நிலைய வளவிற்குள்ளேயே நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்தன என்றும் மேற்படி சீன நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் தங்களிற்கு தேவையான அளவு வெடிமருந்தை மேற்படி கொள்கலன்களிலிருந்து பெறுவார்கள் என்றும், அதே போன்று இன்று தமக்கு தேவையான டைனமற்றை எடுத்துக் கொண்டு கல்குவாரிக்குச் செல்வதற்காக வருகை தந்த மேற்படி சீன நிறுவனத்தினர் டைனமற்றை தங்களின் வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த போதே இவ் விபத்து ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கொள்கலன்களும் வெடித்துச் சிதறியதாகவும் தெரியவருகிறது.










0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’