வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

இனப்படுகொலை, போர்க்குற்ற சாட்சியங்களை திரட்டுவதற்காக சர்வதேச குழு அமைக்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர்

லங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த விடயங்களைக் கையாள்வதற்காக சர்வதேச குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும் ஜனநாயக செயற்பாட்டுக்கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் பி.ராமசாமி துரிதப்படுத்தியுள்ளார்
.அரச சார்பற்ற நிறுவனங்கள்,, அரசியல்வாதிகள் ஆகியோரையும் கொண்ட இக்குழு சில மாதங்களுக்குள் செயற்படும் எனவும் ஐநா. மனித உரிமைகள் குழுவிடம் கையளிப்பதற்காக இனப்படுகொலை குறித்த சாட்சியங்களை இக்குழு திரட்டவுள்ளதாகவும் பேராசிரியர் ராமசாமி தெரிவித்ததாக மலேசியாவிலிருந்து வெளியாகும் 'த சன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கப்படும் என பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்திய அரசாங்களிலுள்ள தலைவர்கள் உட்பட இனப்படுகொலைக்குப் பொறுப்பான அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும் அதற்கு எதிராக இக்குழு போராடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’