வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

'ஒலுவில், இறக்காமம் பகுதிகளின் புதிய படை முகாம்களால் மக்கள் அச்சத்தில்'

லுவில் மற்றும் இறக்காமம் போன்ற பிரதேசங்களில் பாதுகாப்பு படையினர் புதிய முகாம்களை அமைப்பதன் காரணமாக அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் தோன்றியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.டி.ஹசனலி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
மேலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள கரையோரங்களில் உல்லாச அபிவிருத்தி எனும் போர்வையில் அங்குள்ள மக்களை சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் வெளியேற்றி அவர்களின் காணிகளை சுவீகரித்து வருவதை முஸ்லிம் காங்கிரஸ் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை பொத்துவில் பகுதியில் உள்ள வேகம்பற்று மற்றும் தாரம்பல்லை 
பகுதிகளில் நீண்ட காலமாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தமிழ் பேசும் மக்களை தற்போது அங்கு செல்லாமால் பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளதாகவும் ஹசன் அலி கூறினார்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடாமல் தான் தோன்றித்தனமாக முடிவெடுப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்கள் அரசாங்கத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வாய்மூடி மெளனிகளாக இருந்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’