இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலக நாடுகள் முழுவதும் அமெரிக்க நிறுவனங்களையும், அமெரிக்கர்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாகவும், எனவே அமெரிக்கர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அதிபர் ஒபாமா அரசு நிர்வாகம் எச்சரித்துள்ளது
.இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வாஷிங்டனில் வெளியிட்ட அறிக்கையில், 'அல்கொய்தா, தலிபான், லஷ்கர் இ தொய்பா மற்றும் சில பிரிவிணை இயக்கங்கள் அமெரிக்க அரசின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த இயக்கத்தினர் உலகம் முழுவதும் அமெரிக்கர்களையும், அமெரிக்க நிறுவனங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டம் வகுத்து இருப்பதாக உளவுத் துறைக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்து உள்ளன.
மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்கா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இந்த தாக்குதல் நடைபெறுவதற்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தானில் ஆபத்து அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் பொது இடங்கள், ஆடம்பர ஓட்டல்கள், ரெயில்கள், ரெயில் நிலையங்கள், மார்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள், மசூதிகள் போன்றவற்றுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் நீடித்து வருகிறது. உள்நாட்டு பிரிவினை பயங்கரவாதிகள் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துதற்கான திட்டங்களை வகுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுபோல் பாகிஸ்தானிலும் அமெரிக்கர்களையும், அமெரிக்க நிறுவனங்களையும் பயங்கரவாதிகள் குறி வைத்து இருப்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. எனவே அமெரிக்கர்கள் முன்எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆப்ரிக்கா மற்றும் தெற்கு கருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு கடல் வழியாகச் செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாகனங்களில் வெடிகுண்டு வைத்த தாக்குவது மட்டுமின்றி, கடத்தல், துப்பாக்சிச்சூடு நடத்துதல், ராக்கெட்டு குண்டு வீசித் தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்,' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’