பி் பி்ரபல பேட்மின்டன் வீராங்கனை ஜ்வாலா தனது கணவரும் உலகின் 13-ம் நிலை பேட்மின்டன் வீரருமான சேத்தன் ஆனந்திடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு ஜ்வாலாவுடன் இருந்த தொடர்பே காரணம் என்று கூறப்படுகிறது. இதனை ஜ்வாலா உடனடியாக மறுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் எம்.பியுமான அசாருதீன் தனது முதல் மனைவி நஸ்ரினை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்தார். அதன் பிறகு பாலிவுட் நடிகை சங்கீதா பிஜ்லானியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் அசாருதீனுக்கும், பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதனால் சங்கீதா பிஜ்லானியை அசாருதீன் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல் வெளியானது. நீதிமன்றத்திலும் இதற்காக விண்ணப்பித்துள்ளாராம் அசாருதீன்.
இந்நிலையில் ஜூவாலா தனது கணவரும் உலகின் 13-ம் நிலை பேட்மின்டன் வீரருமான சேத்தன் ஆனந்திடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து, ஜூவாலா அசாருதீனை திருமணம் செய்யக் கூடும் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள ஜூவாலா, "சேத்தன் ஆனந்திடமிருந்து நான் விவாகரத்து கேட்டு மனு செய்துள்ளது உண்மையே. இதற்கு அசாருதீனுடன் உள்ள தொடர்புதான் காரணம் என்று கூறப்படுவது வதந்தியாகும். அசார் விவாகரத்துக்கு மனு செய்துள்ளார் என்பது எப்படியோ, அப்படித்தான் நான் விவாகரத்துக்கு மனு செய்திருப்பதும். அதற்கும் இதற்கும் முடிச்சுப் போடாதீர்கள். நாங்கள் இருவரும் இப்போதும் நல்ல நண்பர்கள்", என்று கூறியுள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’