வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து இலங்கை - இந்தியா பேச்சுவார்த்தை

மிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து இலங்கை அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் இன்று தெரிவித்தார்.

இலங்கை தமிழ் மக்களின் துன்பங்களை தணிப்பதற்கு இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் கலந்துரையாடிய பின்னர் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே சிதம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்தர்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை இலங்கை அனுப்பி வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆரய உள்ளதாக கடந்த வாரம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க், தமிழ் நாடு முதலமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
இலங்கைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒழுங்கான தீர்வு ஒன்றை இந்திய பிரதமர் முன்வைக்க வேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருந்தார். அடுத்து வரும் சில நாட்களில் இந்தியாவின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு சென்று இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் பி,சிதம்பரம் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’