முன்னேஸ்வரம் காளியம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள மிருகப் பலியை பொலிஸ்மா அதிபர் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் இல்லாவிடின் அதில் தான் தலையிட்டு தடுக்க வேண்டியேற்படும் எனவும் தேசிய பிக்குமார் சம்மேளனத்தின் செயலாளர் ரஜவத்த விஜய தேரர் கூறியுள்ளார்
.கொழும்பில் வியாழனன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவ்வாறு தாம் தலையிட்டால் அது மதங்களுக்கிடையிலான ஐக்கியத்தில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
"ஓகஸ்ட் 25 ஆம் திகதி 300 ஆடுகள் மற்றும் கோழிகள் இக்கோயிலில் பலிகொடுக்கப்படவுள்ளன. அகிம்சாவாதி நாட்டில் இத்தகைய பலிபூஜைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தில் மிருகங்களை பலியிடுவதற்கு சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் இல்லையென்பதால் இதை தடுப்பது பொலிஸாருக்கு கடினமான செயலல்ல" எனவும் அவர் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’