தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுத கொள்வனவாளருமான குமரன் பத்மநாதன் அரிதாகக் தோன்றும் வீடியோ காட்சியொன்று இணையத்தளங்களில் உலா வருகிறது.
கடந்த ஜுன் மாதம் வவுனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை அனோஜா வீரசிங்கவும் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றியுள்ளார்.
மேற்படி வீடியோவில் படையினர் மற்றும் ஏனைய அதிகாரிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் உட்பட தமிழ் இளைஞர்கள் மத்தியில் கே.பி. உரையாற்றுகிறார். அந்த வீடியோ காட்சியில் தான் யாரென்று அடையாளம் தெரிகிறதா எனக் கேட்கும் கே.பி., அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது எனவும் கூறுகிறார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’