கொக்குவில் மற்றும் பூநாறிமரத்தடிப் பகுதிகளில் படையினரின் சோதனை நட வடிக்கைகள் நேற்றுக் காலையில் இருந்து இரவு வரை தீவிரமாக்கப்பட் டிருந்தன. 
கொக்குவில், பிரம்படியில் கடந்த ஞாயிற் றுக்கிழமை இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக் கையில்  படையினரும் பொலிஸாரும் ஈடு பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. 
கொக்குவில், பிரம்படி அம்மன் கோயில்                 மற்றும் ஸ்ரேசன் வீதிப் பகுதிகளில் பொலிஸாரும் படையினரும் ரோந்து செல் கின்றனர். வீதியில் செல்பவர்களை மறித்து படையினர் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
நேற்றுக்காலை நாச்சிமார் கோயிலடி மற்றும் பூநாறி மரத்தடிப் பகுதிகளூடாக  பயணித்தவர்களையும் மறித்து "எங்க போறது' என்று விசாரித்தனர்.
நேற்றிரவு அப்பகுதி ஊடாகக் சென்ற வாகனங்களும் சோதனையிடப்பட்டது டன் உடற்சோதனையும் இடம்பெற்றது. 
இதேவேளை 
வலிகாமம் பகுதியில் சில இடங்களில் புதிய காவலரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’