களனி பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறிய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் இவர்கள் ஏற்படுத்தத் தவறியுள்ளதால் அப்பாவிச் சிறுவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மேற்படி அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
களனி பிரதேசத்தில் டெங்கு நோயினால் குழந்தையொன்று பாதிக்கப்பட்டதை அடுத்தே அமைச்சர் மேற்படி தீர்மானத்துக்கு வந்ததாக அவரது ஊடக பிரிவு தெரிவித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’