வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கல்லடியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

ழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடியில் 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான செல்வராசா சங்கர் என்ற குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதியான இவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் அருகிலுள்ள ஆலய உற்சவத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து உறங்கியதாகவும் காலை 6 மணியளவில் சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படும் நேரத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளை இருக்கவில்லை எனவும் அவர்கள் ஆலயத்திற்குச் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தினர். அத்துடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வி.ராமகமலன் சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேதப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
உயிரிழந்தவரின் சடலத்தில் காயங்கள் காணப்படுவதால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’