வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

ஐ.நா. நிபுணர் குழுவின் அமர்வுகள் இம்மாத முதல் இரண்டு வாரங்களில் நடைபெறும்

 க்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அமர்வுகள் இம்மாத முதல் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிபுணர்கள் குழுவின் உத்தியோகபூர்வ அமர்வுகள் ஆகஸ்ட் மாத முதல் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின் அடிப்படையில் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளரின் பேச்சாளர் சொன்ஹா சோய் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் போது இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமர்வுகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் நிபுணர்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு திரட்டும் நோக்கில் இலங்கை அதிகாரிகளுடன் பல்வேறு வழிகளில் தொடர்புகள் பேணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான நியமங்களுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கையை இலங்கை அரசாங்கமும் எதிர்காலத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’