வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

ஊழல் ராணி ஜெயலலிதா தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றுகிறார் அழகிரியின் மகள் கயல்விழி சாடுகிறார்


காடு ஆறுமாதம்,நாடு ஆறுமாதம் என்று இருந்து வரும் ஊழல் ராணி ஜெயலலிதா தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார் மத்திய இரசாயனத்துணை அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி.

சென்னையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கயல்விழி பேசுகையில்;
காடு ஆறுமாதம், நாடு ஆறுமாதம் என்று இருந்து வரும் ஜெயலலிதாவைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஊழல் ராணி ஜெயலலிதா தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். இதைக்கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாங்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக நிற்கிறோம் என்றார்.
கவிஞர் தமிழச்சி பேசுகையில்; ஜெயலலிதா ஒரு ஊழல் ராணியாக இருக்கிறார் என்பதை தோலுரித்துக்காட்டும் வண்ணம் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை எற்பாடு செய்து நடைபெறுகிறது.
தமிழக மக்கள் தங்களின் ஞாபக சக்தியின் விளைவாக வரும் தேர்தலிலும் இந்த அம்மையாருக்கு வலுவான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’