வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

எங்கள் தேசிய முன்னணி கட்சியின் ஆலோசகராக சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவு

ங்கள் தேசிய முன்னணி என்ற கட்சியின் ஆலோசகர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட மங்கள சமரவீரவினால் எங்கள் தேசிய முன்னணி கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.


மங்கள சமரவீர உள்ளிட்ட கட்சியின் 21 முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டதனை அடுத்து எங்கள் தேசிய முன்னணியின் தலைவியாக உபுலாங்கனி மாலகமுவ தெரிவு செய்ப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் கட்சியின் பொதுச் செயலாளராக உபுலாங்கனி மாலகமுவ செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தேசிய அமைப்பாளரான ருவான் பேர்டினான்டஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாது தொடர்ந்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமது கட்சி எதிர்ப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக எங்கள் தேசிய முன்னணி கட்சி அறிவித்துள்ளது.
எனினும் குறித்த கட்சியின் ஆலோசகர் பதவியை ஏற்றுக் கொண்டதாக சந்திரிகா பண்டாரநாயக்க எவ்வித அறிவிப்பினையும் மேற்கொள்ளவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’