வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

எம்.வி சன் சீ கப்பலில் ஆயுதங்கள் இருக்கவில்லை:கனேடிய பாதுகாப்பு பிரிவினர்!

எம். வி சன் சீ கப்பலில் பயணித்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் கப்பலில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததாக கனேடிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்
.கப்பலில் உறங்குவதற்கான அறைகள், சுத்தமான உணவு வகைகள், சுத்திகரிக்கப்பட்ட நீர், உண்பதற்காக மீன்வகைகள் என அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரை மேற்கொள்காட்டி கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், கப்பலில் ஆயுதங்கள் உள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். தாம் கப்பலை முழுமையாக சோதனையிட்டுள்ளதாகவும், கப்பலிலிருந்து எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த கப்பலில் வருகைத்தந்த 490 பேரில் பெரும்பான்மையானோருக்கு தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் மறுத்துள்ளனர்.
சன் சீ கப்பலில் வருகை தந்த அனைவரும் நலமாக உள்ளதாகவும், அவர்கள் முழுமையாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்;.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’