வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கம்பவாரிதியின் பேச்சுக்கு கண்கலங்கிய ரஜினி

மிழகம் சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய கம்பவாரிதி ஜெயராஜின் பேச்சைக் கேட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கியுள்ளார். விழாவில் நடைபெற்ற "கம்பன் புலமை திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா?" என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தின் போதே இந்த சம்பவம் இடபெற்றுள்ளது
.இதன்போது உரையாற்றிய கம்பவாரிதி, "நான் தமிழன். ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?. ஒருவர் மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடுதல், சுதந்திரமாக பேச விடல் மற்றும் செயற்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்" என்றார்.
"ஒருவன் கோடிக் கோடியாக உழைக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தை தராது. அறமாக வாழ்ந்தால் சுவர்கத்துக்கு போகலாம். ஆனால், சுவர்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும். காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாக சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், மேடையின் முன்வரிசையில் அமர்ந்து கம்பவாரிதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந் கண்கலங்கியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’