வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மூன்று மொழிகளையும் தேசிய மொழிகளாக்க வேண்டும்: ஜே.வி.பி

லங்கை அரசு தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் தேசிய மொழிகளாக அமுல்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறினார்
.இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சோமவன்ஸ, "மக்கள் விடுதலை முன்னணி ஒரு போதும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான கட்சியல்ல. எனினும் தமிழ் மிதவாதிகளும், தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி என்ற அபிப்பிராயத்தை பரப்புகின்றனர்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் தேசிய மொழிகளாக அமுல்படுத்தப்பட வேண்டும். பல வருடங்களுக்கு முன் இதை முதலில் வலியுறுத்திய கட்சி ஜே.வி.பி.தான். இன்றும் நாம் அதே கொள்கையிலேயே இருக்கிறோம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கை தோல்வியடைந்து விட்டது. எனினும், நாங்கள் எமது கொள்கையில் தோல்வியடையவில்லை. காரணம் எங்களின் கொள்கையும் அடித்தளமும் பலமாக இருப்பதே ஆகும். எமது கட்சிக்கு இன்றும் மக்கள் செல்வாக்கு உள்ளது" எனக் குறிப்பிட்டார்.
இன்று ஜாதிக ஹெல உறுமயவும் மக்கள் விடுதலை முன்னணியும் ஒரே கொள்ளைகளை கொண்ட கட்சி என தமிழ் மக்கள் கருதுகின்றனர். ஆனால், ஒரு போதும் அவ்வாறில்லை எனவும் சோமவன்ஸ அமரசிங்க கூறினார்.
தாங்கள் ஒரு போதும் தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் எந்த பாகத்திலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டு என்பதையே எமது கட்சி விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், தமிழ்,முஸ்லிம் சிரேஸ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’