வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நோபோல் விவகாரம்; மன்னிப்புக் கோரியது இலங்கை கிரிக்கெட் சபை

 
தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் வீரேந்தர் ஷேவாக் 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இலங்கை பந்துவீச்சாளர் சுராஜ் ரந்திவ் நோபோல் வீசியதன் மூலம் ஷேவாக் சதம் குவிக்கும் வாய்ப்பை பறித்தமை குறித்து, இலங்கைக் கிரிக்கெட் சபை மன்னிப்பு கோரியதாக இந்திய அணி முகாமையாளர் ரஞ்ஜிப் பிஸ்வால் கூறியுள்ளார்
.

அதேவேளை, இவ்விடயம் தொடர்பாக சுராஜ் ரந்தீவ் தனது அறைக்கு வந்து மன்னிப்பு கோரியதாக வீரேந்தர் ஷேவாக் தனது ட்விட்டர் இணையத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் 171 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி   170 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, ஷேவாக் 99 ஓட்டங்களுடன் இருந்தார்.

அவர் சதம் குவிக்கவும் அணி வெற்றி பெறவும் ஒருஓட்டம் மாத்திரமே தேவைப்பட்டது. இந்நிலையில் பந்து வீசிய சுராஜ் ரந்திவ், நோபோல் ஒன்றை வீசினார். அப்பந்தில் ஷேவாக் சிக்ஸர் அடித்த போதிலும், நோபோல் மூலம் பெறப்பட்ட ஒரு ஓட்டத்துடன் போட்டி முடிவடைந்தது. இதனால் ஷேவாக் அடித்த சிக்ஸர் ஓட்டக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில், தான் சதம் குவிப்பதை தடுப்பதற்காக வேண்டுமென்றே ரந்திவ் நோபோல் வீசியதாக ஷேவாக் நேற்று குற்றம் சுமத்தியிருந்தார். 'அவர்கள் (இலங்கை அணியினர்) விளையாட்டு மனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அதுவேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. ஒரு வீரர் 99 ஓட்டங்களுடன் இருந்தால் நோபோல் வீச வேண்டும் என்பதில்லை. அதற்கு கிரிக்கெட்டில் இடமில்லை' என ஷேவாக் தெரிவித்திருந்தார்.

இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார கருத்துத் தெரிவிக்கையில் ரந்திவ் வேண்டுமென்றே நோபோல் வீசினாரா என்பது தனக்குத் தெரியவில்லை எனக் கூறினார். ஆனால்" அவ்வாறான நடவடிக்கைளுக்கு கிரிக்கெட்டில் இடமளிக்க முடியாது. அவர் வேண்டுமென்றே அப்படிச் செய்திருந்தால் இது குறித்து அவருடன் பேசி இனிமேல் அப்படி நடைபெறாமல் பார்த்துககொள்வேன்" எனவும் சங்கக்கார கூறினார்.

இந்நிலையில், இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயலாளர் நிஷந்த ரணதுங்க இன்று காலை தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மன்னிப்பு கோரியதாக இந்திய அணி முகாமையாளர் ரஞ்ஜிப் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’