விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற் பட்டு வந்த முன்னாள் பெண் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினியை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
தமிழினி, பாதுகாப்புச் செயலரின் உத்தரவின் பேரில் குற்ற புலனாய்வுப் பிரிவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த காலம் முடிபடைந்துள்ளதால் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழினி கடந்த வருடம் மே மாதம் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல்வேறு குற்றச்செயல்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’