பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் அல்லது இல்லாதொழியுங்கள் என எதிர்க்கட்சியினர் கோருகின்றனர். PTA எனப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது யார்?
தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் தோன்றுவதற்கு முன்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. 1980 களின் ஆரம்பத்தில் இதனை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி அதன் மூலமே மக்கள் விடுதலை முன்னணியைக் கட்டுப்படுத்தியது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்கள் அதனை நீக்குமாறு இன்று வெளிநாடுகளுக்கு சென்று கோருகின்றனர். என்ன நிலையிலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
புதைத்துவைத்துள்ள இடங்களிலிருந்து ஆயுதங்கள் இன்று வரை மீட்கப்படுகின்றன. எனவே அவசரகால சட்டம் நடைமுறையிலிருக்க வேண்டியதவசியம்.
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான சட்டங்களை மாற்றுமாறு கோருவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு என்ன அதிகாரம் உள்ளது?
இவ்வாறு கோரிக்கை விடுப்பதானது இலங்கையின் இறைமைக்கு ஏற்படுத்தும் அழுத்தம். விடுதலைப்புலிகளுக்கோ உலகில் எந்தவொரு நாட்டுக்கோ அரசாங்கம் அடிபணியப் போவதில்லை.
ஜி.எஸ்.பி வரிச்சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் அல்லது இல்லாதொழியுங்கள் என எதிர்க்கட்சியினர் கோருகின்றனர். PTA எனப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது யார்?
தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் தோன்றுவதற்கு முன்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980 களின் ஆரம்பத்தில் இதனை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி அதன் மூலமே மக்கள் விடுதலை முன்னணியைக் கட்டுப்படுத்தியது" என்றார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’