வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள் ; பொன்சேகாவின் சட்டத்தரணி கோரிக்கை

"சந்தேக நபர்களை முறையாக குற்றம் சாட்டப்படாமல் அடைத்து வைத்திருப்பதைவிட அவர்களை தூக்கிலிடுங்கள்." - இவ்வாறு ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவரின் பிரத்தியேக உதவியாளர் ஆகியோர் தொடர்பான வழக்கில் அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் இன்று கூறினார்.


இராணுவத்திலிருந்து தப்பியோடியோரை மறைத்து வைத்திருந்ததுடன் அவர்களை அரசு மீதான விசுவாசத்தை துறக்கச் செய்ததாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவரின் பிரத்தியேக உதவியாளர் சேனக ஹரிப்பிரிய ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போதே மேற்படி சந்தேக நபர்கள் சார்பில் வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணியான திறன்த வலலியத்த மேற்கண்டவாறு கூறினர்.
இவர்கள் மீது தனித்தனியாகவே அல்லது கூட்டாகவோ குற்றம் சாட்டப்படவில்லை என்றும் இவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சந்தேக நபர்கள் சில முடிவுகளை எடுக்கும் வகையில், மறியலில் அல்லது நீதிமன்றத்தில் அல்லது பொலிஸ் சாவடியில் குறைந்த பட்சம் 60 நிமிடங்களாவது பேசிக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் அது இங்கு நடைபெறவில்லை எனவும் கூறினார்.
சிரேஷ்ட அரச சட்டத்தரணியான தமித் தொட்டவத்த, இவ்வாறான கலந்துரையாடலுக்கு சேனக டி சில்வா மட்டுமன்றி ஜெனரல் சரத் பொன்சேகாவும் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இந்த சமயத்தில் சரத் பொன்சேகா தனது கையை உயர்த்தி, தனது சம்மதத்தை தெரிவித்தார். ஆயினும் பின்பு இவ்வாறான சந்திப்புக்கு சட்டத்தில் இடமில்லை என அரச சட்டத்தரணி கூறினார்.
சந்தேக நபர்களின் சந்திப்புக்கான வேண்டுகோளை நிராகரித்த நீதவான், வழக்கை ஆகஸ்ட 16 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’