பயங்கரவாதத்øதை ஒழித்த பின்னர் துரித பொருளாதார அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை என்று சீனா தெரிவித்துள்ளது
.சீனா அதன் பங்களிப்பாக, சமாதானமும் ஸ்திரதன்மையும் மலர்ந்துவரும் இலங்கையில் மக்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இயற்கை சத்தியை பயன்படுத்தி பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப்படும் இவ்வேளையில் அதற்கு தேவையான அனைத்தையும் வழங்க சீனா தன்னாலியன்ற முயற்சியை மேற்கொள்ளும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சி, தற்பொழுது பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் உறுதியளித்துள்ளார்.நாடுகள் சிறியதோ பெரியதோ அவை அவைக்கான பிரச்சினைகள் உண்டு.
சம்பந்தப்பட்ட நாட்டின் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு அந்தந்த சந்தர்ப்பத்திற்கு அமைய வெளியார் தலையீடும் அழுத்தமும் இன்றி அவை அவைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று சீன அமைச்சர் சுட்டிக் காட்டியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்கம் ஆகியன தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த ஆணைக்குழு அதன் விசாரணைகளை ஆரம்பித்து விட்டது என்று அமைச்சர் பீரிஸ் சீன அமைச்சரிடம் தெரிவித்தார்.
ஆணைக்குழ அதன் பணிகளை தொடர்வதற்கு சர்வதேச சமூகத்தின் பூரண அதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவது மிக முக்கியமாகும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை, சீன சர்வதேச ஆய்வு நிலையத்தில் ராஜதந்திர சமூகத்தின் முன்னணி உறுப்பினர்களும் உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பீரிஸ், பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை துரித பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க பாதையில் வழிநடத்திச் செல்லும் இலங்கையின் அனுபவத்தை எடுத்து விளக்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’