சுமார் 200 இலங்கை அகதிகளுடன் செல்லும் சன் சீ கப்பல் தற்போது கனடா பசுபிக் கரையோரத்தை சென்றடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவின பொருளாதார வலயத்தை சென்றடைந்துள்ள இந்தகப்பலை கனடாவின் கடற்படை கப்பல் சந்தித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த கப்பல் இன்று வியாழக்கிழமை மாலை அல்லது நாளை காலையில் பிரிட்டிஸ் கொலம்பியாவுக்கு கனேடிய கடற்படையினரின் பாதுகாப்புடன் வழிநடத்தி செல்லப்படவுள்ளதாக வன்குவார் சன் செய்திசேவை தெரிவித்துள்ளது.
இதன் போது கனேடிய கடற்படையினர் கப்பலில் சோதனை மேற்கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கையர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது 500 பேர் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இன்னும் கப்பலில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தநிலையில் கப்பல் தொடர்பில் கருத்துரைத்துள்ள கனேடிய பொது பாதுகாப்பு துறை அமைச்சர் விக் டோவ்ஸ் கனேடிய துருப்பினர் இந்த கப்பலை கடந்த இரண்டரை மாதங்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
எனவே இந்த கப்பலில் இருப்பவர்கள் யார் என்பதில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கப்பலில் வருவோர் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் கனேடிய சட்டத்திற்கு இணங்க, விசாரணை செய்யப்படுவார்கள் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’