யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற மத்திய அமைச் சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, எஸ்.எம்.கிருஷ்ணா, சீ.ராசா உட்பட மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை அமைப்பதன் மூலம் இலங்கையில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வட மாகாணத் தமிழர்களுக்கு நேரடியாக உதவ முடியும் என்ற அடிப்படையில் இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’