வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

ஜப்பான் ஹிரோசீமா நகரில் அணுகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் 65ஆவது வருட நினைவுதினம் இன்று video


ப்பானிலுள்ள ஹிரோசீமா நகரில் முதலாவது அணுகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட 65ஆவது வருட நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.


1945ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டாவது உலக மகா யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது அமெரிக்க விமானப் படையினரால் ஹிரோசீமா நகரில் முதலாவது அணுகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த குண்டுத் தாக்குதலின்போது, 140,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, இந்த அணுகுண்டுத் தாக்குதல் இடம்பெற்று 3 நாள்களின் பின்னர் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ஜப்பானின் நாகசாகி என்ற இடத்தில் இரண்டாவது அணுகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த 65ஆவது நினைவுதினத்தையொட்டி, குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் பாடசாலை மாணவர்கள் ஒன்றுகூடி சோக இசை இசைத்தனர். இதன்போது, அங்கு மணியோசை எழுப்பி நினைவுகூரப்பட்டது.
அத்துடன், குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
இதற்கிடையில், இந்த 65ஆவது நினைவுதினத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் முதல்த் தடவையாகக் கலந்து கொண்டு ஹிரோசீமாவிலுள்ள சமாதான ஞபகார்த்த பூங்காவிலுள்ள என்றுமே அணையாத தீபத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது அங்கு கருத்துத் தெரிவித்த பான் கீ மூன், " வாழ்க்கை குறுகியது ஆனால், நினைவு நீளமானது" எனக் கூறினார்.
அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளான நாடு என்ற வகையில் ஜப்பான் அணுவாயுதங்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’