வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஆகஸ்ட், 2010

பேச்சுவார்த்தைக்கு 3 மாத சண்டை நிறுத்தம் : அரசுக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு

த்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், அதற்காக இரு தரப்பிலும் 3 மாத காலம் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவர் கிஷேன்ஜி அழைப்பு விடுத்துள்ளார்
.இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கிஷேன்ஜி அளித்துள்ள பேட்டியில், "குடியரசுத் தலைவரும், பிரதமரும் தங்களது சுதந்திர தின உரையில், மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டுவிட்டு அமைதிப் பேச்சுக்கு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாங்கள் ஒருபோதும் வன்முறையைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. ஆயுதங்களைக் கையேந்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
எங்கள் தோழர் ஆசாத், அரசுடன் பேசத் தயாராக இருந்தபோது தான் கொல்லப்பட்டார். அதிலிருந்தே அரசுக்கு அமைதிப் பேச்சில் அக்கறையில்லை என்பது தெளிவாகிறது.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக இருதரப்பிலும் 3 மாதம் சண்டை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக திரிணாமுள் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி செயலாற்ற வேண்டும். அவருக்கு வேறு பணிகள் இருக்கும் பட்சத்தில் அருந்ததி ராய், கபீர்சுமன் எம்.பி., பி.டி.சர்மா, சோபல் நர்லேகர், ரமண்ணா ஆகியோரில் யாராவது ஒருவரை பேச்சுவார்த்தைக்கு பயன்படுத்தலாம்.
நாட்டில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்ப வேண்டுமென பிரதமர் விரும்பினால், கூட்டுப் படையை வாபஸ் பெற வேண்டும். ஆசாத் கொலை தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும்.
மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும்.
மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் காவல்நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.8000 கோடி நிதியையும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடைக்கைக்கு நாளொன்றுக்கு செலவிடப்படும் ரூ.60 லட்சம் நிதியையும் பின் தங்கிய மாவட்டங்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும்," என்று கிஷேன்ஜி அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் பேட்டி, எங்கிருந்து அளிக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’