வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

ட்விட்டரை பயன்படுத்துவோர்களில் அதிக வயதான இங்கிலாந்தை சேர்ந்த 104 வயது மூதாட்டி இயற்கை எய்தினார்.

ட் விட்டரை பயன்படு்த்துவோர்களில் அதிக வயதானவரும், 56,000 தொடர்பாளர்களை கொண்டவருமான ஐவி பீன் என்பவர் பிராட்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்தார்.
இந்த கொல்லுப்பாட்டி ட்விட்டரில் தனக்கென ஒரு படையையே நண்பர்களாக வைத்துள்ளார். அவர் இறந்த மருத்துவமனையின் மானேஜர் மூதாட்டியின் உடல் நிலையைப் பற்றி அவர் ரசிகர்களுக்கு அவ்வப்பொழுது தெரிவித்துக் கொண்டிருந்தார். அவர் இறுதியாக நேற்று காலை 10 மணிக்கு மூதாட்டியின் மரண செய்தியை தெரவித்தார்.
நேற்று முன்தினம் காலை 12.08 மணி அளவில் ஐவியின் உயிர் அயைதியாக பிரிந்தது. இந்த செய்தியை என்னால் உடனே உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க முடியவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த துயரச் செய்தியை அறிந்த பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அவர் நினைவாக பேஸ் புக்கில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய பரபரப்பான தலைப்பு இது தான்.
ஐவி ஒரு முன்னாள் மில் தொழிலாளி. அவர் மருத்துவமனயில் இருக்கும்போதும் தன் நிகழ்வுகளை அவ்வப்போது தெரிவித்துக்கொண்டே இருப்பார்.
ட்விட்டரை பயன்படுத்துவதற்கு முன் நான் முழு நாளும் உட்கார்ந்து கொண்டும், தூங்கிக் கொண்டும் தான் இருந்தேன் என்று அவர் அன்மையில் கூறினார்.
இந்த ஆண்டு அவர் பாப் பாடகர் பீட்டர் ஆன்ரேவை சந்தித்தார். இளம்பெண்களின் கரகோஷத்திற்கிடையே இந்த மூதாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டார் அந்த 37 வயதான பாப் பாடகர். இந்த புகைப்படத்தை தான் ஐவி தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்திருந்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’