வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஜூலை, 2010

சியத்த நிறுவனம் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அரசாங்கம் உத்தரவு

சியத்த வானொலி, தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற தீவைப்புச் சம்பவம் குறித்து விசேட புலனாய்வுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவை அரசாங்கம் பணித்துள்ளது.


இனந்தெரியாத நபர்களால் மேற்படி நிலையம் தாக்கப்பட்டதாக குறித்த நிறுவனத்தின் நிர்வாகம் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களைக் கைது செய்துவற்காக பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் குறித்த 12 சந்தேக நபர்களையும் இதுவரை கண்டறியமுடியவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி ஊடக நிறுவனத்தின் செய்தி அறைக்குள் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு தீவைக்கப்பட்டதால் கணினிகள் மற்றும் இயந்திரங்கள் தீக்கிரையானதுடன் செய்தி ஒளிபரப்பையும் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’