தனது மகள் ஆசைப்பட்டதற்காக வீட்டில் வைத்து வளர்த்து பின்னர் திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு நடிகர் சிவாஜி கணேசன் தானமாக கொடுத்த யானை சாந்தி நேற்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தது.
கடந்த 1964ம் ஆண்டு இந்த யானை தானமாக தரப்பட்டது. அன்று முதல் யானை அங்கு வளர்ந்து வந்தது. இந்த நிலையில் வயோதிகம் காரணமாக யானைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. ஆனால்கோவில்நிர்வாகம் யானையை சரிவரப் பரமாரிக்கவில்லை என்றுதெரிகிறது. இந்த நிலையில் யானைக்கு வலது கண்ணில் பார்வை பறிபோனது.
2 நாட்களுக்கு முன்பு கோவிலுக்குள் யானை தடுமாறி விழுந்து விட்டது. இதனால் உடல் நலம் மேலும் மோசமானது. இந்த நிலையில் நேற்று காலை சாந்தி இறந்து போனது.
இதனால் பக்தர்கள் கவலையும், சோகமும் அடைந்தனர். மக்கள் பெரும் கூட்டமாக திரண்டு வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினர். பால், பழம் வைத்து சூடம் காட்டி வணங்கினர்.
யானை சாந்தி இறந்த தகவல் அறிந்ததும், சிவாஜி கணேசனின் பேத்தி விஜயலட்சுமி தனது குடும்பத்தினருடன் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் யானையின் உடலை கிரேன் மூலம் தூக்கிச் சென்று கோவில் வளாகத்திற்குட்பட்ட பகுதியில் அடக்கம் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’