புதிதாக திருமணம் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திரசிங் டோனி செவ்வாயன்று தனது மனைவி சகிதம் இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாக காந்தியின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றதாக இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டோனியும் சாக்ஷியும் கடந்த ஞாயிறன்று இரவு திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவி சோனியாவையும் டோனி தம்பதியினர் சந்தித்தனரா என வினவியபோது ராகுலை சந்திப்பதற்கு மாத்திரமே அனுமதி பெறப்பட்டது என இந்திய கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’