வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 ஜூலை, 2010

திபெத்திய அகதிகளுக்கு வழங்கிய சலுகை இலங்கை தமிழருக்கும் வேண்டும் - சீமான்

தமிழக அரசின் உயர்கல்வித்துறை அரசாணையானது இலங்கைத் தமிழ் மாணவர்கள் படிக்க தடையாக உள்ளது. அவர்களுக்கு கல்வி மறுக்கும் அரசாணையினை திரும்பப்பெற இந்திய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீமான் அதில் மேலும் குறிப்பிடுகையி, வீடிழந்து, நாடிழந்து தொப்புள் கொடி உறவு என்று நம்மை நாடி வரும் நம் சகோதரர்களுக்கு இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் கொடுமையும் கெடுபிடியும் அளப்பறியவை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை இழந்தாலும் தம் கல்வியை இழக்க கூடாது என்று இலங்கைத் தமிழ் உறவுகள், படித்து முன்னேறவேண்டும் என்று மேலேழுந்து வந்தால் அதிலும் பேரடி கொடுக்கிறார்கள் என்று தனது அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
இலங்கைத்தமிழர்கள் பொறியியல் கல்வி பெறும் விடயத்தில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணை ஒவ்வொரு இலங்கைத் தமிழ் மாணவனின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள ஆணைப்படி,ஒரு அகதி முகாமில் இருக்கும் ஒரு இலங்கைத்தமிழன் மதிப்பெண்கள் எவ்வளவு அதிகம் பெற்றிருந்தாலும், பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான அனைத்து இடங்களும் பிற மாணவர்களுக்கு நிரப்பப்பட்ட பின் பொதுப் பிரிவின் கீழ் வெற்றிடங்கள் ஏதேனும் இருப்பின் அதில் மட்டுமே அவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றது.
அதிலும், இது பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் தான், மருத்துவத்துக்கு இந்த வாய்ப்பும் இல்லை.பொதுவாகவே பொதுப்பிரிவில் இடங்கள் வெற்றிடமாக இருப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
அப்படியே இருந்தாலும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அதை விற்றுக் காசாக்கத் தான் எண்ணுமே தவிர அதை ஒரு ஏழை இலங்கைத்தமிழ் அகதிக்கு வழங்காது.
ஆகவே இலங்கைத்தமிழனுக்கு கல்வி என்றும் எட்டாக்கனியாகத் தான் இருக்கும்.அதன் விளைவு தான் கிருஷ்ணகிரியில் உள்ள இலங்கைத்தமிழ் அகதி மாணவன் 1,152 மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்பு பெற வழியில்லாமல் இன்று நிர்க்கதியாய் நிற்கும் சூழ்நிலை நம் கண் முன்னே நிலவுகின்றது.
திபெத்திய அகதிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து,அரசு சலுகையுடன் கல்வி கற்க தனி இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த நாட்டில் எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு மட்டும் என்ன இந்த ஓரவஞ்சனை?
அதுவும் தமிழர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புக்களை தேடிப்போய் அளிக்க வேண்டிய இங்குள்ள தமிழக அரசே தடைக்கற்களை உருவாக்குவது வேதனையான ஒன்று.
ஆகவே நம் தமிழ்ச்சொந்தங்கள் தமிழ்நாட்டில் பொறியியல் கல்வி பெறத்தடையாக இருக்கும் உயர்கல்வித்துறை அரசாணையினை உடனடியாக தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும் என்று குறித்த அறிக்கையின் மூலம் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’