வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஐ.நாவின் செயலர் பான் கீ மூன் இலங்கையிடம் மண்டியிடுவார்! மேர்வின் சில்வா இறுமாப்பு

ஐ.நா. செயலர் பான் கீ மூன், இலங் கைக்கு எதிராகச் செயற்பட்டு வருவதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக் கச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் இலங்கையிடம் மண்டியிடுவார் என்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் மேம்பாலம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிரி ழக்கும்போது, தானும் உயிரிழந்து விடு வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரர் மீது குண்டுத் தாக் குதல் நடத்தப்பட்ட போதும் தைரி யத்தை இழக்காத ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, திடமாக நின்று செயற்பட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் நாட்டின் வெற்றியை ஒருபோ தும் காட்டிக்கொடுத்தில்லை. இவ்வாறான
ஜனாதிபதிக்கு வலுசேர்க்கக் கிடைத் தமை மகிழ்ச்சியானது எனவும் இதனால் ஜனாதிபதியின் மரணம் சம்பவிக்கும் போது தனது மரணமும் நிகழும் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
ஐ.நா. செயலர் பான் கீ மூன், இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டு வருவதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை வரலாறு தொடர்பான வம்சக் கதைகளை பான் கீ மூனுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க போகிறார் எனவும்
மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் அதிலிருந்து தகுந்த பாடம் கற்றுக்கொள்ளும் பான் கீ மூன், இலங்கையிடம் மண்டியிடுவார் என்றும் மேர்வின் சில்வா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’