வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 4 ஜூலை, 2010

பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போடச் சொன்னவர்தான் ஜெ.-வீரபாண்டி ஆறுமுகம்

சென்னை: 1991-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போதைய பிரதமரான பி.வி.நரசிம்மராவோடு தொடர்பு கொண்டு, இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்று இலங்கை அரசோடு சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக போராடும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் விசாரணை செய்து, தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதியைப் பற்றி அவதூறான கருத்துக்களை சொல்லியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இலங்கை வாழ் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காத ஜெயலலிதா, இன்று தமிழ் இனத்தினுடைய தலைவியாக தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதை தமிழகமும், தமிழர்களும், ஈழத் தமிழர்களும் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடிய ஈழத் தமிழர்களை, இலங்கையில் அமையும் அரசுகள் எல்லாம் அவர்களை படுகொலை செய்வதும், அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதும் நிறுத்தப்பட வேண்டும், தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த முதல்வர் கருணாநிதி 1985-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களையும் வரவழைத்து மதுரையில் தனது தலைமையில் உருவாக்கப்பட்ட "டெசோ'' அமைப்பு கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்தும் ஈழத் தமிழர்கள் உரிமைக்காக போராடக்கூடிய போராளிகளையும் அழைத்து, ஈழத் தமிழர்கள் சுகந்திரமாக வாழ்ந்திட தமிழ் ஈழம் அமைய வேண்டும் என வழிவகுத்து "டெசோ'' அமைப்பு ஒன்றை உருவாக்கி தமிழர்களை ஒன்று சேர்த்து தமிழ் ஈழத்திற்கு ஆதரவு திரட்டியவர் தான் தலைவர் கருணாநிதி.
அப்போது அ.தி.மு.க.வோ அல்லது அதன் தலைவராக தற்போது உள்ள ஜெயலலிதாவோ ஆதரவு தெரிவிக்கவில்லை. 1990-ம் ஆண்டு கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று அன்றைய பிரதமராக இருந்த வி.பி.சிங் தனது இல்லத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களைக் கொண்டு, கூட்டிய கூட்டத்தில் அந்நாளைய முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரிடம் ஈழ மக்களுடைய பிரச்சினை குறித்து எடுத்து விளக்கி அவர்கள் அனைவரின் ஆதரவையும் தமிழ் ஈழத்திற்காக திரட்டியவர்தான் நம்முடைய முதல்வர் கருணாநிதி.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் யுத்தத்தை நிறுத்திட, இந்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு , இலங்கை அரசை வற்புறுத்துவதுடன் தமிழகத்தில் பிரமாண்டமான மனித சங்கிலி பேரணிகள் மற்றும் கண்டனக் பொதுக் கூட்டங்களை நடத்தியவர் கருணாநிதி.
இதுபோன்ற ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கருணாநிதி ஆதரவு திரட்டுகிறபோதெல்லாம் அதற்கு எதிராக செயல்பட்டவர்தான் ஜெயலலிதா. கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசியதற்கிணங்க இலங்கை ராணுவம் போரை நிறுத்தம் செய்ய வலியுறுத்த, அன்றைய மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்தவரும், இன்றைய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அப்பாவி தமிழ் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முயற்சி எடுத்தவர் முதல்வர் கருணாநிதி.
1991-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போதைய பிரதமரான பி.வி.நரசிம்மராவோடு தொடர்பு கொண்டு, இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்று இலங்கை அரசோடு சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக போராடும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் விசாரணை செய்து, தூக்கிலிட வேண்டும் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா.
ஜெயலலிதா இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் அமைவதை ஏற்காதது மட்டுமல்லாமல், அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அறிக்கை விடாத ஜெயலலிதா, இன்று விடுதலை போராளிகளுக்காக, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவரைப்போல தன்னை காட்டிக்கொள்ள முன்வந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் எதிராக கருத்துக்களை சொன்னதோடு, இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்ததோடு, ஈழப்போராளி இயக்கத்தினரை தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக கருதி, இவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதா, இன்று கண்ணீர் சிந்துகிறார் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’