வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 ஜூலை, 2010

இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அச்சுறுத்தலில்லை: பிரதி உயர்ஸ்தானிகர்

இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் வி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.



இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசினை தமிழ்நாட்டின் சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாகவும் அக்கட்சிகள் அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றன. இதுதொடர்பாக சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் வி.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது…
இங்குள்ள எமது அலுவலகத்திற்கு இந்திய அரசாங்கம் போதிய பாதுகாப்பினை வழங்கிவருகின்றது. ஆகையினால் எவருடைய அச்சுறுத்தலுக்கும் நாங்கள் பதில் சொல்லத் தேவையில்லை. இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவு இருப்பதால் இப்படியான பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது என நம்புகிறோம்… என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் பற்றி அவரிடம் கேட்டபோது…
இங்குள்ள அகதிகள் தமது சுயவிருப்பின் பேரில் இலங்கைக்கு திரும்பிச் செல்கிறார்கள். அப்படி பல குடும்பங்கள் இதுவரை தமது சொந்த இடங்களுக்குச் சென்றிருக்கின்றன. இன்னும் பலர் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் பிரத்தியேகமாக அவர்களை வெளியேற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’