வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 ஜூலை, 2010

இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் : அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.



அமெரிக்க இராணுவத் தளபதிகள் குழுவின் தலைவரான மெக் முல்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் இருந்து டெல்லிக்குப் பயணமான அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"மும்பையில் நடைபெற்றதைப் போன்று இந்தியாவில், மற்றுமொரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் தீவிரவாதிகள் திட்டமிட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தானைத் தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பிராந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. இருநாடுகளும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு பலரை இழந்துள்ளோம்.
கடந்த 20ஆண்டுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராணுவ உறவு வளர்ந்துள்ளது. இருப்பினும் இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் வேறுபாடு இருப்பதாகவும், இரண்டையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமெரிக்கா கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’