வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 8 ஜூலை, 2010

பிரெஞ்சு ஜனாதிபதியின் பிரச்சார நிதி தொடர்பாக விசாரணை ஆரம்பம்

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி தேர்தல் பிரச்சாரங்களுக்காக சட்டவிரோதமான முறையில் நிதி திரட்டினார் என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் மிகப்பெரிய கோடீஸ்வர பெண்ணான லிலியன் பெட்டன்கோர்ட்டின் முன்னாள் கணக்காளர் சுமத்திய குற்றச்சாட்டொன்றை தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின்போது 150,000 யூரோ பணத்தை நிக்கலஸ் சார்கோஸியின் பிரசாரங்களுக்கு லிலியன் வழங்கியதாக லிலியனின் முன்னாள் கணக்காளர் கிளேரி திபோத் கூறியுள்ளார்.
பிரான்ஸில் தேர்தல் பிரசாரங்களுக்கு கட்சியொன்று பெற்றுக்கொள்ளக்கூடிய ஆகக்கூடிய நன்கொடை 7500 யூரோவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோஸி இத்தகைய குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கமுடையவை என்று கூறி புறக்கணிப்பதற்கு முயன்றுவருகிறார். ஆனால் தினமும் இது தொடர்பாக புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
87 வயதான லிலியன் பெட்டன்கோர்ட்டுக்கு 17 பில்லியன் யூரோ பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’