இந்திய வெளிவிவகார அமைச்சின் அவசர அழைப்பின் பேரில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் அறுவர் கொண்ட குழு இன்று மாலை புதுடில்லி புறப்படுகி றது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந் தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந் திரன் ஆகியோர் கொண்ட குழுவே மூன்று நாள் விஜயமாக இன்று புறப்படுகிறது.இந்திய வெளிவிவகார அமைச்சர் எம். கே.கிருஷ்ணா, வெளிவிவகாரச் செயலா ளர் நிருபமாராவ், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரைக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்துவர்.
இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு ஒன்றை எட்ட இந்தியாவின் பங்க ளிப்பு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடிய மர்வு ஆகிய விடயங்களுக்கே பேச்சில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூட் டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந் திரன் நேற்றிரவு தெரி வித்தார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’