போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைத்துறை அமைச்சர் டியூ குணசேகரவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் புளொட் தலைவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கருத்து வெளியிடுகையில், போராட்டத்தில் பங்குபற்றிய அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த போராளிகளும் முற்றுமுழுதாக ஆயுதங்களைக் கைவிட்ட நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான முயற்சிகளை எவருமே மேற்கொள்ளவில்லை. அனைவருமே புலிகள் இயக்கப் போராளிகள் பற்றியும் அல்லது புலிகள் அமைப்பில் இருக்கக்கூடிய விதவைகள் பற்றியுமே பேசுகிறார்களே தவிர மாற்று இயக்கங்களில் இருந்து விடுபட்ட கடந்தகால போராளிகள் அல்லது அந்த இயக்கங்களில் இருந்து பிரிந்த தோழர்கள் கொல்லப்பட்டபோது உருவாக்கப்பட்ட விதவைகள் சம்பந்தமாக எவருமே கதைக்கவில்லை. இது தொடர்பாக நான் அண்மையில் அமைச்சர் டியூ குணசேகர அவர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேறு பலருடனும் கதைத்து அவர்களுடைய புனர்வாழ்வையும் முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கின்றேன். அல்லது இதுபெரிய சமூகப் பிரச்சினையாக உருவாகும் என்பதை அவர்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பதாக திரு டியூ குணசேகர அவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’