பிரேஸிலின் முன்னிலை கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான புரூனோ பெர்னாண்டஸை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. அவரின் முன்னாள் காதலி காணாமல் போனமையே இதற்குக் காரணம்.
26 வயதான புரூனோ, பிரேஸிலின் மிகப்பெரிய கால்பந்தாட்டக் கழகமான ரியோ டி ஜெனீரோவின் பிளமெங்கோ கழகத்தின் அணித்தலைவரும் கோல் காப்பாளரும் ஆவார். இவர் ஏற்கெனவே திருமணமானவர். எனினும் அவரின் காதலியான எலிஸா சமுடியோ கர்ப்பிணியான நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போனார்.
ஏலிஸா கடத்தப்பட்டு கொல்லப்பட்டுவிட்டதாக புரூனோவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்ததையடுத்து புரூனோவையும் அவரின் நண்பரான பெரைய்ரா ரொமாவோவையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எலிஸா கொல்லப்பட்டுள்ளதாக புரூனோவின் 17 வயதான சகோதரர் தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் உடல் எங்குள்ளது எனத் தெரிவிக்கவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக புரூனோவின் மனைவி டெயான் சௌஸா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’