வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஜூலை, 2010

இலங்கை உற்பத்திகளை பங்களாதேஷ் விரும்புகிறது: அமைச்சர் றிஷாத்

ஏனைய நாடுகளை விட, பங்களாதேஷ் இலங்கையின் உற்பத்திகளை அதிகமாக விரும்பி கொள்வனவு செய்கின்றது என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.



இலங்கையின் ஏற்றுமதி தரம் கடந்த வருடங்களைப் பார்க்கிலும், 2009 ஆண்டு முதல் 13 சதவீதமான வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வந்துள்ள பங்களாதேஷின் வர்த்தக சபை உறுப்பினர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர், மற்றும் டாக்கா வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலின் போது சமூகமளித்திருந்தனர்.
எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெறும் மெகா கைத்தொழில், வர்த்தகக் கண்காட்சியில் இலங்கையின் உற்பத்திகளையும் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’